இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும். இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்படிக்க | IND vs WI: இந்திய அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல்! இளம் வீரர்களுக்கு ஆபத்து!


வெஸ்ட் அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்கும். கடந்த போட்டியில் விளையாடாத ஓபனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் வருகையால் கடந்த போட்டியில் விளையாடிய இஷான் கிஷன் வெளியே உட்காருகிறார். மிடில் ஆர்டரில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் விளையாடுகின்றனர். பின்வரிசையில் தீபக்ஹூடா களமிறங்குவார். ஸ்ரேயாஸ் அய்யர் குவாரன்டைன் முடிந்து அணிக்கு திரும்பியிருந்தாலும், அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறி.



கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணியில் இடம்பிடிப்பார்கள். வேகப்பந்துவீச்சில் பிரதீஷ் கிருஷ்ணா, நவ்தீப் சைனி மற்றும் முகமது சிராஜ் கூட்டணி களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் இந்திய அணியில் ஏதும் மாற்றம் இருக்காது. கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியை வென்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்த்தினால் மட்டுமே அந்த அணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. 


மேலும்படிக்க | மும்பை அணி இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுத்த 5 வீரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR