புது டெல்லி: இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 29) முதல் கிறிஸ்ட்சர்ச்சில் ஆரம்பமாக உள்ளது. முதல் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால், விராட் தலைமையிலான இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 9 ஆம் இரண்டாவது போட்டி நடைபெறும் கிறிஸ்ட்சர்ச்சில் 18 முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானம் மேகமூட்டமாக இருக்கும். மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உகுந்ததாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.


நியூசிலாந்து மண்ணில் 50 ஆண்டுகளில் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக மார்ச் 2009 இல் ஹாமில்டன் டெஸ்டில் நியூசிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 160 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல 1976 ஜனவரியில் ஆக்லாந்தில் நடந்த மற்றொரு போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இரு அணிகளுக்கும் இடையிலான வெலிங்டன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 300 விக்கெட் கிளப்பில் சேர வாய்ப்பு உள்ளது. இந்த சாதனையை செய்ய இன்னும் 3 விக்கெட் தூரம் தான் உள்ளது. இதன் மூலம் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்தியர் என்ற பெருமையை இஷாந்த் பெறுவார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே அதிகப்பட்சமாக 619 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.


300+ விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள்:


வீரர் இன்னிங்ஸ் விக்கெட்
அனில் கும்ப்ளே 236 619
கபில் தேவ் 227 434
ஹர்பஜன் சிங் 190 417
ரவிச்சந்திரன் அஸ்வின் 132 365
ஜாகீர் கான் 165 311

இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிரான 58 டெஸ்ட் போட்டிகளில் 21 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. அதே நேரத்தில் 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 26 போட்கள் ட்ராவில் முடிந்தது. 


அதே நேரத்தில், நியூசிலாந்தில் நடந்த 24 போட்டிகளில், 5 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 10 டெஸ்ட் டிராவில் முடிந்தது. 


இரு அணிகளுக்கிடையில் இதுவரை 20 தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 11 முறை வென்றது. 5 முறை தோற்றது. 4 தொடர்கள் சமநிலையில் முடிந்தது.


இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), மாயங்க் அகர்வால், பிருத்வி ஷா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா 
விஹாரி, ரித்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா.


நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளெண்டால், ட்ரெண்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜாமீசன், ஹென்றி நிக்கோல்ஸ், ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டாரெல் மிட்செல், எஜாஸ் படேல், டிம் சவுத்தி, நீல் வாக்னர், பி.ஜே.வாட்லிங் மற்றும் மாட் ஹென்றி.