விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. 


2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளனர். ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மணிக்கு அதிகபட்சமாக 143 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசிய 19 வயதான அல்ஜாரி ஜோசப் அறிமுக வீரராக களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆடுகளத்தில் பவுன்சுடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று ஆடுகள பராமரிப்பாளர் கூறியுள்ளார். 


இந்த மைதானத்தில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த 15 டெஸ்டுகளிலும் முடிவு கிடைத்திருக்கிறது. ஒன்று கூட ‘டிரா’ ஆனதில்லை. இந்திய அணி இங்கு இதுவரை 11 டெஸ்டுகளில் விளையாடில் 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.


இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை டென்2, டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.