2-வது டெஸ்ட்: மே.இ.தீவுகள் 196, இந்தியா 126/1
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது.
மேற்கு இந்திய தீவுகள் 196 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்கத்தில் இசாந்த் சர்மா, மொகமது ஷமி ஆகியோருக்கு ஓரளவுக்கு நல்ல ஸ்விங்கும் பவுன்சும் இருந்தன. இசாந்த் சர்மா ஒரே ஓவரில் பிராத்வெய்ட், டேரன் பிராவோவை வீழ்த்தினார். மொகமது ஷமி சந்திரிகாவாய் அவுட் செய்ய 7/3 என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது. பின்னர் பிளாக்வுட் இறங்கினார். நன்றாக ஆடிய அவர் 48 பந்துகளில் அரைசதம் கண்டார்.மேற்கு இந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸ் 53-வது ஓவரில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. அஸ்வின் 18-வது முறையாக 5 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், தவண் ஆகியோர் திசை, லெந்த் என்று எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத மே.இ.தீவுகள் பந்து வீச்சை எளிதில் எதிர்கொண்டனர். ஷிகர் தவன் அடித்த பந்த்தை ஷார்ட் கவரில் பிராவோ கேட்ச் பிடித்தார். தவண், ராகுல் இணைந்து 19.3 ஓவர்களில் 87 ரன்கள் என்ற நல்ல தொடக்கம் கொடுத்தனர்.கே.எல்.ராகுல் 114 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார், புஜாரா 57 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். முதல் நாள் ஆட்டம் முடிந்தது