3-வது டி20 கிரிக்கெட் போட்டி: ஒரு பார்வை!
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20, இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரலையாக பார்கலாம்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முன்னதாக 4-1 என்ற கணக்கில், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பின்னர் தெடங்கிய டி20 தெடரின் 3 போட்டிகளில் இரு அணியினரும் தலா 1 போட்டி வெற்றிப் பெற்று சம எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடைபெரும் போட்டியானது, தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகும்.
எனவே இரு அணிகளுக்கும், இன்றைய போட்டி கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அணி விவரம்:
இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, கேதர் ஜாதவ், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ் பாண்டே, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹால், பும்ரா, ராகுல், அக்ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், நெக்ரா.
ஆஸ்திரேலியா: வார்னர் (கேப்டன்), ஆரோன்பிஞ்ச், டிரெவிஸ் ஹெட், ஹென் ரிக்ஸ், மேக்ஸ்வெல், கிறிஸ்டியன், டிம்பெய்ன், நாதன் கோல்ட்டர், ஆடம் ஜம்பா, ஸ்டோனிஸ், பெரென்டோர்ப், ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை.