புதுடெல்லி: கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைக்கப்படுவதையும், அவை முறியடிப்பதையும் நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். ஆனால் வெகு சிலரே அறிந்த, இத்தனை வருடங்களாக யாராலும் முறியடிக்க முடியாத 5 சாதனைப் பதிவுகளைப் பற்றி தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி20யில், போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்ததைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒருமுறைதான் நடந்துள்ளது. டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஒரே பேட்ஸ்மேன் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மட்டுமே.


வங்கதேசத்துக்கு எதிராக 2012-ம் ஆண்டு பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சோஹாக் காசியின் பந்தில் கெய்ல் இந்த சாதனையை படைத்தார்.



 
சச்சின் பேட்டிங்கில் சதம் அடித்த அப்ரிடி
1996 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஷாஹித் அப்ரிடி 37 பந்துகளில் 11 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் அதிவேக சதம் விளாசி உலக சாதனை படைத்தார். 



இந்த போட்டியில் அப்ரிடி, சச்சின் டெண்டுல்கரின் பேட்டை பயன்படுத்தினார் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையில் அப்ரிடியிடம் சரியான பேட் இல்லை, எனவே வக்கார் யூனிஸ் அவருக்கு சச்சினின் பேட்டை வாங்கிக் கொடுத்தார். தற்போது இந்த சாதனையை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார்.  


 
 


டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே அவுட்
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே அதிக முறை ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே 3 முறை அவுட் ஆனார். இதுவரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.



தொடர்ந்து நான்கு முறை ஆட்டநாயகன் 


கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் சவுரவ் கங்குலி.


1997ல் டொராண்டோவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கங்குலி தொடர்ந்து 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றார்.


ஒரு டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகள்
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜிம் லேக்கர் டெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் ஆஸ்திரேலிய அணியை தனி ஒருவராக தோற்கடித்தார்.



இது ஒரு டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் செய்யப்பட்ட  மிகப்பெரிய சாதனையாகும். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிம் லேக்கர், இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இந்த சாதனைகளைப் பற்றி பலருக்கும் தெரியாது. வேறு சில பல சாதனைகள் முறியடிக்கப்படலாம், புதிதாக உருவாக்கப்படலாம், ஆனால், இந்த சாதனைகளை யாராலும் உருவாக்கி விட முடியாது என்றே சொல்லலாம்.


மேலும் படிக்க | 2022 அக்டோபர் முதல் இவை தான் கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR