5_வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்ல போவது யார்?
தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
விசாகப்பட்டணம்: தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியிடம் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தல இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளது..
கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா அணி:- டோனி (கேப்டன்), விராத் கோஹ்லி, அஜிங்க்யா ரகானே, ரோகித் ஷர்மா, மணிஷ் பாண்டே, ஜெயந்த் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பூம்ரா, கேதார் ஜாதவ், மன்தீப் சிங், அமித் மிஷ்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா.
நியூசிலாந்து அணி:- கேன் வில்லியம்சன் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், ஆன்டன் தேவ்சிச், மார்டின் கப்தில், டாம் லதாம், மேத்யூ ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், லூக் ரோங்கி (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, ராஸ் டெய்லர், பி.ஜே.வாட்லிங், டிம் சவுத்தீ.