வரும் டிசம்பர் 18-ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் IPL 2019-கான ஏலத்தில் பங்கேற்க 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019-ல் பங்கேற்கும் 8 அணிகளில் விளையாட 70 வீவர்கள் தேவைப்படும் நிலையில், இந்த 70 இடங்களுக்காக 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த வீரர்களில் 232 பேர் வெளிநாட்டு வீரர்களாக உள்ளனர். பதிவு செய்துள்ள வீரர்களில் 800 வீரர்கள் அறிமுக வீரர்கள் எனவும், இதில் 746 பேர் இந்தியர்கள் எனவும் தெரிகிறது.


குறிப்பிடும் வகையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 59 வீரர்கள், ஆஸ்திரேலியா 35 வீரர்கள், மேற்கிந்தியா - 33 வீரர்கள், இலங்கை - 28 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -27 வீரர்கள் என பதிவுசெய்துள்ளனர். இவர்களை தவிர அமெரிக்கா, ஹாங்காங், அயர்லாந்து, நெதர்லாந்து நாட்டில் இருந்து தலா ஒரு வீரர்கள் பதிவு செய்யதுள்ளனர்.


முதல் முறையாக, இந்த பட்டியலில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், பீகார், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாண்ட், சிக்கிம், உத்தரகண்ட் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்த வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.


IPL 2019 ஏலத்தில் 70 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன, இதில் இந்தியர்கள் 50 பேர் இடம்பெருவர், வெளிநாட்டு வீரர்கள் 20 பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.



தற்போது ஏலத்திற்காக பதிவு செய்திருக்கும் வீரர்களின் பட்டியலில் இருந்து வடிக்கட்டப்பட்ட இறுதி பட்டியல் வரும் டிசம்பர் 10-ஆம் நாள் மாலை 5 மணியளவில் வெளியிடப்படும். 


யுவராஜ் சிங், பிரெண்டன் மெக்கல்லம், மிட்செல் ஸ்டார்க் மற்றும் க்ளென் மாக்ஸ்வெல் போன்ற பெரிய பெயர்கள் ஏலத்திற்கு முன்னதாக தங்கள் உரிமையாளர்களால் வெளியிடப்பட்ட வீரர்கள் ஆகும்.


வழக்கமாக ஏலத்தினை நடத்தும் ரிச்சர்ட் மேட்லேக்கு பதிலாக, இம்முறை ஹக் எட்மேட்ஸ் ஏலத்தினை நடத்துவார் என தெரிகிறது. இவர் கிளாசிக் கார் மற்றும் தொண்டு ஏல விற்பனையாளராக பல ஆண்டு அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.