IND vs WI ஒருநாள் தொடர்; யாருக்கு சாதகமாக அமையும் - ஒரு பார்வை!
மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றால் என்ன நடக்கும்... ஒரு பார்வை!
மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றால் என்ன நடக்கும்... ஒரு பார்வை!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பிற்பகள் 1.30 மணியளவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் மேற்கிந்திய அணியை தும்சம் செய்த இந்தியா ஒருநாள் தொடரையும் எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரை இந்தியா வென்றால் என்ன நடக்கும்...?
1974-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியினை விளையாடிய இந்தியா இதுவரை 948 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளது. இத்துனை போட்டிகளிலும் இந்தியாவிற்கு எதிராக களமிறங்கிய அணிகள் 19. இந்த அணிகளில் பெர்முடா, நமிபியா போன்ற சிறிய நாடுகளும் அடங்கும்.
900 ஒருநாள் போட்டிகளுக்கு மேல் விளையாடிய இந்தியா குறிப்பிட்ட 5 அணிகளுக்கு எதிராக மட்டும் தலா 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளது. அதாவது...
இலங்கை (158),
பாக்கிஸ்தான் (131),
ஆஸ்திரேலியா (128),
மேற்கிந்திய (121) மற்றும்
நீயூஜிலாந்து (101).
எனினும் இந்த அணிகளுக்கு இடையே இந்திய அணியின் வெற்றி சதவீதம் என்பது பகுதி அளவு கூட இல்லை...
ஆஸ்திரேலியா உடன் விளையாடிய போட்டிகளில் 38.13%
தென்னாப்பிரிக்கா உடன் விளையாடிய போட்டிகளில் 42.50%
பாக்கிஸ்தான் உடன் விளையாடிய போட்டிகளில் 42.51%
மேற்கிந்திய உடன் விளையாடிய போட்டிகளில் 42.51%, வெற்றி பெற்றுள்ளது.
தற்போது நடைபெறும் மேற்கிந்தியாவிற்கு எதிரான தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியா "மேற்கிந்திய உடன் விளையாடிய போட்டிகளில் 50.00% வெற்றி" என புது சாதனையினை படைக்க வாய்ப்புள்ளது. பல சாதனைகள் படைக்கும் இந்திய அணிக்கு இது பெரிய விஷயம் இல்லை...
இதுவரை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியபோது...
மொத்த போட்டி - 121 |
வெற்றி : இந்தியா - 56 | மேற்கிந்தியா - 61 |
ட்ரா : 1
முடிவு இல்லை : 3