சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார் தென் ஆப்பிரிக்க வீரர்
அதிவேகமாக 9 ஆயிரம் ரன்கள் எடுத்து கங்குலியின் சாதனையை தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார்.
தனது அசாத்திய பேட்டிங் திறமையால் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சாதனையை டி வில்லியர்ஸ் நிகழ்த்தினார்.
205 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை எடுத்து அதிவேகமாக இந்த மைல் கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் சவுரவ் கங்குலி 228 இன்னிங்ஸ்களில் 9 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை படைத்த வேகமாக பேட்ஸ்மேன்களில் பட்டியல்:
இந்த பட்டியலில் டி வில்லியர்ஸ், கங்குலிக்கு அடுத்து சச்சின் தெண்டுல்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.