புதுடெல்லி: கடந்த 2004ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமான தென்னாப்பிரிக்காவின் முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்டர் ஏபி டி வில்லியர்ஸ், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். ஏபி டி வில்லியர்ஸ். ராயல் சேலஞ்சர் பெங்களூரின் ஒரு பகுதியாக இருந்தார். மொத்தம், 184 போட்டிகளில் 39.71 சராசரியுடன் 5162 ரன்கள் எடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

39 வயதான ஏபி டி வில்லியர்ஸ், RCB க்காக மூன்று சீசன்களில் முன்னணி ரன் எடுத்தவர் . 2011ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்ததில் இருந்து அதிக ரன் எடுத்த பேட்டர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருப்பவர் இவர்.  


ஏபி டி வில்லியர்ஸ், 2018 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார்.


மேலும் படிக்க | ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் வெளியேற்றம்: ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி இதோ!


ஜியோ சினிமாவுக்கு ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவரிடம் பல சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. இன்னும் சில ஆண்டுகளாவது கிரிக்கெட் விளையாடலாமே என்ற கேள்விக்கு பதிலளித்த ஏபி டி வில்லியர்ஸ், இன்னும் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் அவர் விளையாடினாலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுடன் போட்டியிட விரும்புவதாக கூறினார்.



"கண்டிப்பாக. என்னால் இன்னும் விளையாட முடியும். ஆனால் இப்போது இல்லை. எப்பொழுதுமே பெஸ்ட் ஆக இருக்கறதுதான் எனது பழக்கம். நான் திரும்பி வந்தால், அது பெஸ்ட் ஃபர்மான்ஸ் கொடுப்பதற்காகவே இருக்கும். சொல்லப்போனால், சூர்யகுமார் யாதவுவுக்கு போட்டியா இருக்க வேண்டும். விராட் கோலிக்கு போட்டியாக இருக்க வேண்டும். எனது கேரியரின் கடைசி நான்கு வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்று உணர்ந்தோம். எனது கேரியரின் பின்பகுதியில் நான் கண்டிப்பாக போதுமான கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதுதான் முக்கிய விஷயம் என்று நினைக்கிறேன்." என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறினார்.


"என்னைப் பொறுத்தவரை, என்னால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் என்னால் விளையாட முடியாது, ஏனென்றால் நான் உலகில் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன், மேலும் நீங்கள் வருடங்களில் மூன்று மாதங்கள் விளையாடினால் உங்களால் அதைச் செய்ய முடியாது. முற்றிலும் வாய்ப்பே இல்லை. ஆம். நீங்கள் ஒன்பது மாதங்கள் பயிற்சி செய்யலாம். ஆனால் எதுவும் இல்லை, நடுத்தரப் பயிற்சியுடன் வெளியே இருப்பதும் போட்டியும் இல்லை. கடந்த சில வருடங்களாக கடினமாக இருந்தது. நான் உணர்ந்தேன்" என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | இந்திய அணியில் விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட் எடுத்திருப்பேன் - பாகிஸ்தான் பந்துவீச்சாளர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ