புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தாலிபான்களின் கண்ரோலில் உள்ளது. தாலிபான்களின் ஆக்கிரமிப்பை அடுத்து, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் மற்ற நாடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தான் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்க்கும் மிகவும் வேதனையாக இருக்கிறது. அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள தாலிபான்களின் கண்கள், தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது விழுந்துள்ளன. இனிமேல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி போட்டியில் பங்கேற்குமா, அந்த அணிக்கு தடை விதிக்கப்படுமா என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதற்கு பதில் அளிக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் அட்டவணைப்படி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் (Rashid Khan) தனது நாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். அவரின் நாட்டுப்பற்றை பார்த்து ஆப்கானிஸ்தான் மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.


ரஷித் கானின் நாட்டுப்பற்றுக்கு வணக்கம்:
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷித் கான் (Rashid Khan)விரைவில் ஐபிஎல் 2021 (IPL 2021) இன் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவார். தற்போது அவர் தி ஹண்ட்ரெட் (The Hundred) தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் விளையாடும் போது, அவர் செய்த காரியம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 


நேற்றிரவு நடந்த The Hundred தொடரில் ஒரு போட்டியில், அவர் முகத்தில் தனது நாட்டின் கொடியை (Afghanistan's flag) வரைந்து ஆப்கானிஸ்தானுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். தற்போது அந்த படங்கள் வைரலாகி வருகின்றன.


 



ALSO READ | எவ்வளவு நெருக்கடி வந்தாலும் T20 World Cup தொடரில் பங்கேற்போம்: ஆப்கானிஸ்தான் அணி!


தலிபான்களால் கிரிக்கெட்துக்கு அச்சுறுத்தல்:
சமீபத்தில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஊடக மேலாளரும் பத்திரிகையாளருமான இப்ராஹிம் மொமண்ட் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் தலிபான்கள் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய ஒரு மண்டபத்தில் காணப்படுகின்றனர். இந்த மண்டபம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (Afghanistan Cricket Board) தலைமையகம் ஆகும். 


 



இந்த புகைப்படத்தில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் காணப்பட்டது. உண்மையில், முன்னாள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல்லா மசாரியும் இந்த புகைப்படத்தில் தலிபான்களுடன் இருந்தார். 2010 இல் ஆப்கானிஸ்தானில் அறிமுகமான மஜாரி, 2 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் குறிப்பிடத்தக்கது.


உலகக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்கும்:
இந்தாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐக்கிய அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியும் விளையாடவுள்ளது.


ALSO READ | Taliban: விமானத்தில் இருந்து விழந்தது கால்பந்து வீரர் - அதிர்ச்சி தகவல்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR