ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது தோல்வியை சந்தித்ததன் மூலம் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் செப்டம்பர் 15-ஆம் நாள் துவங்கி செப்டம்பர் 28-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.


இத்தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் ஷேக் ஜாயேத் மைதானத்தில் போட்டியிட்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 


தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகம்மது ஷஹ்சாத் 34(47) மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் 45(65) ரன்கள் குவித்து அணிக்கு பலமான துவக்கத்தினை அளித்தனர். விக்கெட் இழப்பின்றி 10 ஓவருக்கு 50 ரன்களை எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 11.4 வது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. 100 ரன்களை கடந்த பின்னர் இரண்டாது விக்கெட்டை இழந்தது. இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரஹமத் ஷா அதிரடியாக விளையாடி 72(90) ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 249 ரன்கள் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் பெரார 5 விக்கெட்டுகளை குவித்தார்.


இதனையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் மென்டீஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியே, பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர். முக்கிய வீரர்கள் இரண்டு இலக்க ரன்களில் வெளியேற ஆட்டத்தின் 41.2-வது பந்தில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே குவித்த்து. இதனையடுத்து இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


முன்னதாக கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் நடைப்பெற்ற போட்டியில் வங்கதேச அணியிடம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததன் மூலம் தற்போது ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது!