15 மாதத் தடைக்குப் பிறகு களமிறங்குகிறார் மரியா! முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னணி டென்னிஸ் வீராங்கனையாகத் திகழ்பவர் ரஷியாவாவை சேர்ந்த மரியா ஷரபோவா. 30 முறை கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். கடந்த 2016-ம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஷரபோவாவுக்கு 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தடை நீங்கியுள்ளது. 


இதனையடுத்து, ஜெர்மனியில் நடைபெறும் ஸ்டர்ட் கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்கேற்று விளையாடினார். முதல் சுற்றில் இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர்கொண்டார். முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய ஷரோபோவா, அடுத்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் வென்றெடுத்தார்.


15 மாதத் தடைக்குப் பின் பங்கேற்ற முதல் போட்டியிலேயே ஷரபோவா வெற்றி பெற்றுள்ளார்.