பாகிஸ்தானோடு தற்போது நட்புறவு சரியில்லாத சூழலில் டேவிஸ் கோப்பை போட்டியை பொதுவான இடத்தில் நடத்த உலக விளையாட்டு அமைப்பிடம் இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு கேட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் பாகிஸ்தானில் உள்ள இஸ்லமாபாத்தில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து காரணமாக அரசியல் சூழல் பாகிஸ்தானுடன் சரியில்லாத காரணத்தால் தற்போது போட்டியை பொது இடத்துக்கு இந்தியா மாற்றக்கோரியுள்ளது.


டேவிஸ் கோப்பை போட்டிகள் செப்டம்பர் 14, 15-ல் பாகிஸ்தான் தலைநகரில் நடைபெற இருந்தது. அதற்கான விசா வழிமுறைகள் துவங்கி விட்டது. இந்நிலையில் தற்போது காஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி இந்தியவுடனான விமான, ரயில் போக்குவரத்துகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. 


இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் விசா தர மறுத்தால் இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்மல் போக வாய்ப்புள்ளது. ஒருவேளை விசா அளிக்கப்பட்டாலும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்குமா என்பதை உறுதி செய்வது சிக்கல் எழுந்துள்ளது.


1964-க்கு பிறகு டேவிஸ் கோப்பை அணியும், 2008-க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் செல்லவே இல்லை. பொது இடத்தில்தான் பாகிஸ்தான் இந்தியாவுடன் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.