சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மற்றும் பிரைன் லாரா ஆகிய இரு வீரர்களும் தங்கள் சொந்த திறமைகளால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தனர். இரு வீரர்களும் தங்கள் சொந்த நாடுகளுக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுத்தந்தனர். ஆனால், இரு வீரர்களில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது கடினம். இந்த கேள்விக்கு பலரும் பலவிதமான காரணங்களை முன்னிலைப்படுத்தி விவாதித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஊசிப்போட்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஷமி... அதிரவைக்கும் தகவல்!


இந்த நிலையில், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் அலி பச்சர் இந்த கேள்விக்கு தன்னுடைய பதிலை வெளிப்படையாக கொடுத்துள்ளார். அலி பச்சர் தனது சமீபத்திய பேட்டியில், "சச்சின் டெண்டுல்கர் தான் வரலாற்றின் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். பிரைன் லாரா சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலியர்கள் நம்புகிறார்கள். ஆனால், அதை நான் குப்பை என்று சொல்கிறேன். பிரைன் லாரா 4 மில்லியன் மக்களுக்கு முன்பாக விளையாடினார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் 1.4 பில்லியன் மக்களுக்கு முன்பாக விளையாடினார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் எவ்வளவு அழுத்தத்தில் விளையாடியிருப்பார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா?" என்று கேட்டுள்ளார்.


அலி பச்சரின் இந்த கருத்து பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் தனது 24 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரின் வெற்றிக்காக தவம் கிடந்தனர். இந்த அளவிற்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும்போது, சச்சின் டெண்டுல்கர் தனது இன்னிங்ஸ்களில் எந்த தவறும் செய்யக்கூடாது என்ற அழுத்தம் அவருக்கு இருந்தது. அந்த அழுத்தத்தை சமாளித்து, உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார் சச்சின் டெண்டுல்கர்.


அலி பச்சரின் கருத்துக்கு ஏற்ப, சச்சின் டெண்டுல்கர் தான் வரலாற்றின் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறலாம். அவர் தனது திறமை மற்றும் அழுத்தத்தை சமாளிக்கும் திறன் ஆகியவற்றால் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்தவர். அதிக சதங்களை அடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என பல தகர்க்க முடியா சாதனைகளை சச்சின் தன்னகத்தே வைத்திருப்பதே இதற்கு சான்று.  


மேலும் படிக்க | இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயம்... தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வழி இதுதான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ