புது டெல்லி: ஹர்திக் பாண்டியா மற்றும் காதலி நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டரான பாண்டியா குழந்தையின் முதல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் (Hardik Pandya) அவரது காதலியுமான நடாசா சாந்தோகிவ் இருவரும் ஒரு ஆண் குழந்தையை தங்கள் வாழ்க்கையில் வரவேற்ற பிறகு முதல் முறையாக தந்தையாகி விட்டார். ஹர்திக் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் தனது பிறந்த குழந்தையின் அபிமான படத்தைப் பகிர்ந்து கொண்டார்.


சமூக ஊடக தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில், ஹர்திக் பாண்டியா தனது குழந்தையின் சிறிய கையைப் பிடித்திருப்பதைக் காணலாம்.


ALSO READ | SeePic: மடியில் காதலி நடாசா.... கையில் குழந்தையை வைத்து கொஞ்சும் ஹர்திக் பாண்ட்யா!!


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நாங்கள் எங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்படுகிறோம்" என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.


ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிக் ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.



இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹர்திக், நடாசாவுடனான தனது நிச்சயதார்த்தத்தை சமூக ஊடகங்கள் வழியாக அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | Lockdown நேரத்தை வீணடிக்காமல் இந்தி ஆசிரியராக மாறிய ஹார்டிக் பாண்ட்யா.


நடாசாவுடன் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்டிக் நிச்சயதார்த்தம் செய்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய அணியின் பல உறுப்பினர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாம்ல் திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக அறிவித்து மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஹர்திக்.


கடந்த மே 31ஆம் தேதி அன்று ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், "நடாசாவும் (Natasa Stankovic) நானும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டோம், அது இன்னும் சிறப்பாக வரவிருக்கிறது. மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய உயிரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்" எனக் கூறியிருந்தார்.


ALSO READ | திருமணத்திற்கு முன் குழந்தையா? ஹார்டிக் பாண்ட்யா-வின் அதிரடி அறிவிப்பு!