ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு
ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் போன்ற விஷயங்கள் இந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவர் 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் நீடிப்பார். இந்த பதவிக்கு முதன்முறையாக கடந்த 2012-ம் ஆண்டு தேர்வாகியிருந்தார் கும்ப்ளே. தற்போது 3-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.