காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் போட்டியில் மட்டும் இன்றி, உலக கோப்பை போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் சாம் கரண்.  அவருக்கு பதிலாக சாம் கரனின் சகோதரர் டாம் கரண் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.  சிஎஸ்கே அணிக்கு மாற்று வீரராக மேற்கிந்திய ஆல்ரவுண்டர் டொமினிக் டிரேக்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஐபிஎல் 2021ல் சிஎஸ்கே முதல் அணியகா பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.  டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு 3 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. மும்மை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்த டொமினிக் தற்போது சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார்.  23 வயதே ஆகும் டொமினிக் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பிராவோ தலைமையிலான அணியில் சிறப்பாக விளையாடி முக்கிய வீரராக காணப்பட்டார். 



இடது கை வேகப்பந்து வீச்சாளரான டொமினிக் 11 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்திஉள்ளார்.  பந்து வீச்சு மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார்.  இக்கட்டான ஒரு போட்டியில் 24 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதும் வென்றுள்ளார்.  இதுவரை 19 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ள டொமினிக் 20 விக்கெட்கள் வீழ்த்தி 153 ரன்கள் அடித்துள்ளார்.   சிஎஸ்கே அணியில் பேட்டிங் பலமாக உள்ளது, ஆனால் பவுலிங்கில் சொதப்பி வருகிறது.  ராஜஸ்தான் அணிக்கு எதிராக 190 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது. சாம் கரண் நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாமல் வருவதால் டொமினிக்கின் வருகை சிஎஸ்கேவிற்கு பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G