Wrestling: உலக மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக்
இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக்.உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்
மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக்.
மல்யுத்த உலகப் போட்டியின் இறுதிச் சுற்றில் அன்ஷூ மாலிக் அன்ஷு மாலிக், 2016 ஒலிம்பிக் சாம்பியன் ஹெலன் மரோலிஸை சந்திக்கிறார்.
அன்ஷு மாலிக் புதன்கிழமையன்று அபாரமாக விளையாடி சாதனை படைத்தார். 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அன்ஷூ, அரையிறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஒஸ்லோவில் நடைபெற்ற போட்டியில் உக்ரைனின் சோலோமியா வின்னிக்கை, 11-0 என்ற புள்ளிகளில் எதிராளியை சாதுர்யமாக சமாளித்து வெற்றி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷூ. இந்த வெற்றியின் மூலம், நடப்பு போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய போட்டியில், அன்ஷு கஜகஸ்தானின் நிலுஃபர் ரைமோவாவை வெற்றி கொண்ட அன்ஷூ மாலிக், காலிறுதியில் மங்கோலியாவின் தவாச்சிமேக் எர்கெம்பயரை 5-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
20 வயதான அன்ஷூ மாலிக், தற்போது எதிர்கொள்ளவிருக்கும் இறுதிச் சுற்றில், 2016 ஒலிம்பிக் சாம்பியனான ஹெலன் மாரூலிஸை இன்று அக்டோபர் ஏழாம் தேதி வியாழக்கிழமையன்று எதிர்கொள்கிறார். அண்மையில் நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 59 கிலோ எடைப் போட்டியில் முன்னாள் உலக வெள்ளிப் பதக்கம் வென்றவரும், நான்கு முறை ஐரோப்பிய சாம்பியனுமான பிலியானா டுடோவாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் சரிதா மோர் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். முன்னதாக, காலிறுதியில் முந்தைய சுற்றில் 2-8 என்ற புள்ளிக் கணக்கில் தோற்ற சரிதா இன்று வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை பிங்கி 2-5 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜென்னா ரோஸ் பர்கெர்ட்டிடம் தோற்றதை அடுத்து அவர் வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பையும் இழந்தார்.
72 கிலோ பிரிவில், திவ்யா கக்ரான், க்சேனியா புர்கோவாவை தோற்கடித்தாலும், ஜப்பானின் 23 மசாகோ ஃபுருயிச்சிடம் தோற்றுப்போனார்.
Also Read | நடிகை ஊர்வசி ரவுடேலாவை ட்ரோல் செய்யும் ரிஷப் பந்த் ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR