ஐபிஎல் 15வது சீசனினில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற இரு அணிகளும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் மோத உள்ளனர்.  இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள மும்பை அணி, இப்போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ள சென்னை அணி, பரம எதிரியான மும்பையை தோற்கடித்து 2 வது வெற்றியை பதிவு செய்ய மும்முரமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதால் ஆடும் லெவனில் மாற்றம் செய்ய கேப்டன் ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். ஒருவேளை அணியில் மாற்றம் செய்யப்பட்டு அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், இப்போட்டி அவரின் ஐபிஎல் தொடரில் அறிமுக போட்டியாக அமையும். 


மேலும் படிக்க | குல்தீப்புக்கு ஆட்டநாயகன் விருதா? ஐபிஎல்-ஐ வறுத்தெடுத்த நெட்டிசன்கள்


அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?


மும்பை அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மும்பை அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. பும்ராவுக்கு பக்கபலமாக வீசக்கூடியவர்கள் அணியில் யாரும் இல்லை. மில்ஸ் உள்ளிட்ட சிலர் அணியில் சேர்க்கப்பட்டபோதும், போதுமான அளவுக்கு அவர்கள் விளையாடவில்லை. இதனால், அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவரை மும்பை அணி 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 



மும்பைக்கு கடைசி வாய்ப்பு


பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால், மும்பை அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. அதனால், கட்டாயம் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் இக்கட்டான நிலையில் மும்பை களமிறங்குகிறது. 5 முறை சாம்பியன் பிளே ஆஃப் சுற்றில் நீடிக்குமா? அல்லது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறுமா? என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இருந்து முக்கிய வீரர் விலகல் - இலங்கை இளம் வீரர் சேர்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR