நியூடெல்லி: ஆஷஸ் தொடரை வெல்வது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்றுமே மிகவும் முக்கியமானது என்று ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் கூறுகிறார். இன்று, எட்ஜ்பாஸ்டனில் ஆஷஸ் 2023 தொடங்கும் நிலையில், நவீன கால சிறந்த டெஸ்ட் பேட்டர் ஸ்மித், இந்த போட்டியின் 140 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு மற்றும் இரு அணிகளுக்கும் இந்த போட்டியை வெல்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சுட்டிக்காட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணி, ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. இன்று முதல் போட்டி தொடங்குகிறது. ஜூலை 26 ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.


முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, ஓவலில் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.


மேலும் படிக்க | தண்ணீருக்குள் திடீரென குதித்த ரோஹித் சர்மா... அதுவும் மனைவிக்காக - ஏன் தெரியுமா?


டபிள்யூடிசி இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டுக்குப் பிறகு சதமடித்த இரண்டாவது ஆஸி பேட்டர் ஆன ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது மிகுந்த மகிழ்ச்சி தருவதாகக் கூறினார், ஆனால் அவரைப் பொறுத்தவரை, ஆஷஸ் தொடரை வெல்வது ஆகச் சிறந்த மகிழ்ச்சியாக இருக்கும்.  


'WTC இறுதிப் போட்டிக்காக நாங்கள் இரண்டு ஆண்டுகளாக உழைக்கிறோம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கிறோம்': என்று ஸ்டீவ் ஸ்மித் சொன்னது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


ஸ்மித்தின் முதல் WTC இறுதிச் சதம், ஒட்டுமொத்த டெஸ்டில் அவரது 31வது சதம், இந்தியாவுக்கு எதிரான முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களை குவிக்க உதவியது.


முதல் இன்னிங்ஸில் இந்தியா 296 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்கள் குவித்து (டிக்ளேர் செய்யப்பட்டது), இந்தியாவுக்கு 444 என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தனர். இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? அஸ்வின்


“கடந்த வாரம் நாங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றோம். அதற்கு இரண்டு வருட கடின உழைப்பு இருந்தது. இது அனைத்து சிறுவர்களுக்கும் மிகவும் பெருமையான தருணம், ஆனால் ஆஷஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு உச்சகட்டமான போட்டி ஆகும். எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் அதற்காக உழைக்கிறோம், அதனால் அது உற்சாகமாக இருக்கும்,” என்று  ஸ்மித் கூறினார்.


இதற்கிடையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரின் கீழ் இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது, அவர்கள் கடைசி 13 போட்டிகளில் 11 வெற்றிகளை பெற்று, கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட தயாராக உள்ளது,


ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என்று ஸ்மித் கருதுகிறார். "வரலாறு படைத்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளுக்குமே இது மிகப்பெரிய தொடர். இரண்டு அணிகளுமே சிறப்பாகச் செயல்பட விரும்பும் என்பதில் சந்தேகம் இல்லை. எங்கள் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து விளையாடும் விதம், நாங்கள் விளையாடும் விதம் என பல்வேறு விதங்களில் இந்தத் தொடர், பரபரப்பான தொடராக இருக்கும்.


மேலும் படிக்க | IND vs PAK: அடம்பிடித்த பாகிஸ்தான் இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? இதுதான் பின்னணி


கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது ஆஸ்திரேலியா அணி.


எனவே, சொந்த மண்ணின் ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. ஆனால், இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் லீச்சி காயம் காரணமாக விளையாடவில்லை என்பது அந்த அணிக்கு பின்னடைவு. ஆனால், லீச்சிக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலி விளையாடுவார் என்ற நிலையில், ஆஷஸ் தொடர் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஷஸ் போட்டி அட்டவணை 


முதல் டெஸ்ட் (எட்ஜ்பாஸ்டன்) - ஜூன் 16 - ஜூன் 20
இரண்டாவது டெஸ்ட் (லார்ட்ஸ்) - ஜூன் 28 - ஜூலை 2
மூன்றாவது டெஸ்ட் (கிளீன் ஸ்லேட் ஹெடிங்லி) - ஜூலை 6 - ஜூலை 10
நான்காவது டெஸ்ட் (எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்) - ஜூலை 19 - ஜூலை 23
ஐந்தாவது டெஸ்ட் (தி கியா ஓவல்) - ஜூலை 27 - ஜூலை 31


மேலும் படிக்க | தண்ணீருக்குள் திடீரென குதித்த ரோஹித் சர்மா... அதுவும் மனைவிக்காக - ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ