ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி  அடிலெய்டில் நடைபெற்றது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றிப் பெற்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் குவித்த அந்த அணி, இங்கிலாந்து அணியை 236 ரன்களுக்கு சுருட்டியது. ஆஸ்திரேலிய அணியில் லபுசேன் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் 80 ரன்கள் எடுத்தார். மிட்சல் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | உத்தரக்காண்ட் அரசின் தூதுவராக ரிஷப் பந்த் நியமனம்


இதனையடுத்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக விளையாடியது. 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளோர் செய்தது.  468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஹசீப் ஹமீது 6 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு பின் வந்த வீரர்களும் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.


இங்கிலாந்து வீரர்களின் தடுமாற்றத்தால் உற்சாகமடைந்த ஆஸ்திரேலிய வீரர்கள், விரைவாக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் பந்துவீசினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய பட்லர் மட்டும் தடுப்பாட்டத்தை  ஆடினார். 206 பந்துகளை எதிர்கொண்ட அவர் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். அணியை தோல்வியில் இருந்து மீட்க வேண்டும் என நினைத்த பட்லருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசியாக ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆட்டநாயகனாக லபுசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


ALSO READ | ’இந்த 3 நாள்....’ இந்திய வீரர்களுக்கு டிராவிட் சொன்ன முக்கிய அறிவுரை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR