நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அஸ்வின்-க்கு ஓய்வு
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடும் தோனி தலைமையிலான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா மற்றும் அமித் மிஸ்ரா மீண்டும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர்-ஜனவரி ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்திய ஒருநாள்போட்டி அணியில் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. அமெரிக்காவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் எதிராக நடந்த டி20 தொடரிலும் ரெய்னா தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஒருநாள் அணி:
தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே, விராட் கோலி, மணிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, தவல் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதர் ஜாதவ்.