என் குடும்பத்துக்கு அப்பால் இந்த 3 பேருக்கு நன்றி சொல்லணும் - அஸ்வின் நெகிழ்ச்சி
Ashwin: ரவிசந்திரன் அஸ்வின் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கும் நிலையில், தன்னுடைய இந்த சாதனை பயணத்தில் குடும்பத்திற்கு அப்பாற்பட்டு மூன்று பேருக்கு நன்றி சொல்லணும் என இந்திய அணியின் மூன்று வீரர்களை நினைவு கூர்ந்தார்.
தர்மசாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடும் டெஸ்ட் போட்டி ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 14 இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அவர், கபில்தேவ், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு வந்து சேர்ந்தது. அத்துடன் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 100 டெஸ்ட் போட்டி விளையாடிய மூன்றாவது வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே, நாதன் லயன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்குப் பிறகு 100 டெஸ்ட் போட்டிகள் ஆடிய 6வது பிளேயர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார்.
மேலும் படிக்க | தோனி போல ஸ்கெட்ச் போட்ட துருவ் ஜூரல் - அடுத்த பந்தே வீழ்ந்த ஓலி போப்
இதுமட்டுமல்லாமல் 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கும் அஸ்வின், இந்த மைல்கல் எட்டியது குறித்து உணர்ச்சிப்பூர்வமாக தர்மசாலாவில் பேசினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அஸ்வினை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அஸ்வினுக்கு 100வது டெஸ்ட் கேப்பை கொடுத்து கவுரப்படுத்தினார். அப்போது பேசிய அஸ்வின், குடும்பத்திற்கு அப்பாற்பட்டு மூன்று பேருக்கு தவறாமல் நன்றி சொல்லியாக வேண்டும் என நெகிழ்ச்சியோடு கூறினார்.
“தான் பந்துவீச வரும்போது பீல்டிங்கில் பெரும் பங்காற்றிய விராட் கோலி, அஜிங்கியா ரஹானே மற்றும் செட்டேஸ்வர் புஜாரா ஆகியோருக்கு எனது நன்றிகள். ரஹானே ஸ்லிப்பில் இருப்பார். லெக் ஸ்லிப்பில் புஜாரா, ஷார்ட் மிட் விக்கெட்டில் விராட் கோலி இருப்பார். இப்படியான பீல்டிங் கிடைத்தற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும், மிகப்பெரிய அதிர்ஷ்டஷாலியாக இருக்க வேண்டும். ரஹானேவுக்குப் பிறகு ஸ்லிப் இடத்தில் ரோகித் வந்து அபாரமாக கேட்சுகளை பிடித்தார்.” என ரவிச்சந்திரன் அஸ்வின் நெகிழ்ச்சியோடு கூறினார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், விக்கெட் கீப்பர்களை பொறுத்தவரை விருத்திமான் சஹா, எம்எஸ் தோனி ஆகியோர் கேட்சுகளை விட்டு நான் பார்த்ததே இல்லை என தெரிவித்தார். அதேபோல் ரிஷப் பன்ட் டெஸ்ட் போட்டிக்கு வந்து அபாரமான கீப்பிங்கை வெளிக்காட்டினார் என அஸ்வின் புகழாரம் சூட்டினார். அத்துடன் குடும்பத்தினர், தன்னுடைய அப்பாவின் தியாகம் குறித்தெல்லாம் அஸ்வின் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார். அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னுடைய திறமையையும் அவர் நிரூபித்தார்.
மேலும் படிக்க | Video: குல்தீப் யாதவின் அதிசய பந்து... வாயை பிளந்த இங்கிலாந்து - என்ன ஆச்சு பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ