பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி இப்படி பேசலாமா? அஸ்வின் நச்சுனு கேட்ட கேள்வி
ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியதற்கு இந்திய அணி வீரர் அஸ்வின் பாயிண்டாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
ரவி சாஸ்திரி இந்திய அணியில் இருந்தபோது முக்கியமான போட்டிகளில் வெளியே உட்கார வைக்கப்பட்டார் அஸ்வின். இது குறித்து அப்போது பெரும் சர்ச்சைகள் எல்லாம் எழுந்த நிலையில் அஸ்வின் பெரிதாக ஏதும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், ரவிசாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு மீண்டும் கமெண்ட்ரிக்கு வந்துவிட்டார். அண்மையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசியும் இருந்தார். அதில் உலக கோப்பைக்கான இந்திய அணியில் டாப் 7 ஆர்டர்களில் 3 இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். யஷஸ்வி ஜெய்ஷ்வால், இஷான் கிஷன் மற்றும் ரவீந்திர ஜடேஜா என அந்த 3 இடங்களுக்கான பெயர்களையும் ரவி சாஸ்திரி பரிந்துரைத்திருந்தார்.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு ஆப்பு வைக்கிறாரா ஜிதேஷ் சர்மா? டீம் இண்டியா என்ன செய்யும்?
அவரின் இந்த கோரிக்கைக்கு இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பதிலடி கொடுத்திருக்கிறார். ரவி சாஸ்திரியின் கோரிக்கையில் துளி கூட நியாயமில்லை, வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு நியாயமற்ற கோரிக்கை என்று கூறியிருக்கிறார் அஸ்வின். அதற்கான விளக்கத்தை அவரே கொடுத்திருக்கிறார். அஸ்வின் யூடியூபில் பேசும்போது, " டாப் 7 பேட்ஸ்மேன்களில் 3 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார். அப்படி 3 பேட்ஸ்மேன்களை எங்கே கொண்டு வருவீர்கள்? அவர்களுக்கு எங்கே அணியில் இடம் இருக்கிறது?.
நிச்சயமான பிளேயர்கள் லிஸ்டில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா இருக்கிறார்கள். டாப் 3 பேட்ஸ்மேன்களில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மான் கில் ஆகியோர் பிக்ஸாக இருக்கிறார்கள். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டார். அவர் அணியில் இடம்பெறக்கூடும். ஸ்ரேயாஸ் அய்யரும் பயிற்சிக்கு திரும்பியிருக்கிறார். ஒருவேளை அவர் தகுதி பெறாவிட்டால் ஒரு பிளேயருக்கு அங்கே ஸ்பாட் இருக்கிறது. மற்றபடி 3 இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இந்திய அணி இடமே இல்லை. அந்தவகையில் ரவி சாஸ்திரியின் கோரிக்கை நிச்சயமற்றதாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். இனி வரும் போட்டிகளில் இந்திய அணி விளையாடும்போது இந்த இடங்களுக்கு தேவையான பிளேயர்களை அடையாளம் காண பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது. நன்றாக விளையாடும் பிளேயர்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு இருக்கும்.
மேலும் படிக்க | இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ