‘இது என் கடைசி உலக கோப்பை’ ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்
கடைசி நேரத்தில் இந்திய அணியின் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது என்னுடைய கடைசி உலக கோப்பையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உலக கோப்பைக்கான இந்திய அணி
உலக கோப்பைக்கான இந்திய அணியில் கடைசிநேரத்தில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். முதன்முறையாக உலக கோப்பை அணி தேர்வு குறித்த பேச்சு எழும்போது அஸ்வின் பெயர் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. திடீரென அக்சர் படேல் காயமடைந்ததால் அதிர்ஷ்ட காற்று அஸ்வின் பக்கம் வீசியது. ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததால், நேரடியாக உலக கோப்பை அணிக்கு தேர்வாகிவிட்டார்.
மேலும் படிக்க | PAK vs NZ: பாகிஸ்தான் பவுலிங்கை பஞ்சராக்கிய கருப்பு படை.... முரட்டு அடி
அஸ்வின் வைத்திருந்த நம்பிக்கை
அவரின் இந்த பயணம் என்பது நிச்சயம் கத்திமேல் நடப்பது போலவே இருந்தது. அக்சர் படேல் காயமடைந்திருக்காவிட்டால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்த வாய்ப்பில் அவர் ஒழுங்காக பந்துவீசாமல் இருந்திருந்தால் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் உலக கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அனைத்து வாய்ப்புகளுக்கான காற்றுமே அஸ்வின் பக்கம் வீசியதால் தற்போது உலக கோப்பையில் விளையாடும் பிளேயிங் லெவனில் இருக்கிறார். இது அவர் வைத்திருந்த விடாப்பிடியான நம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே பார்க்கப்படுகிறது.
அஸ்வின் என்ன சொல்லியிருக்கிறார்?
இது குறித்து அஸ்வின் பேசும்போது, " நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இந்திய அணியில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக விளையாட்டை ரசிப்பதே எனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். இந்த போட்டியில் மீண்டும் அதை செய்ய விரும்புகிறேன். என்னை கேமரா முன் நிறுத்தக்கூடாது என்று மீடியா நபரிடம் சொன்னேன். ஆனால் அவர் உங்களை தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்கிறார் என்று சொன்ன காரணத்தினால் வந்தேன். என்னை பொறுத்தவரையில் கிரிக்கெட் போட்டியை அனுபவிக்க வேண்டும். அதனை முழுமையாக செய்கிறேன் என்று நம்புகிறேன். இது எனக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். அதனால், அனைத்து போட்டிகளையும் ரசித்து விளையாடுவதுதான் எனக்கு முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ