சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில் 2-ம் இடத்தை தக்கவைத்துக்கொண்டார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தையும், இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


அஸ்வின் கூறியதாவது:-  கோஹ்லி தனக்கு மிகவும் பிடித்தமான வீரர் என்றும், ஆடுகளத்தில் வெற்றி பெறுவது குறித்து போட்டிகளுக்கு முன்பே திட்டமிடும் அவர், களத்தில் வந்த பிறகும் வீரர்களுடனும் கலந்து ஆலோசிப்பார். அவர் கொடுக்கும் உற்சாகத்தால் தான் மைதானத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்படமுடிகிறது, எனது திட்டமிடலுக்கு ஏற்ப தேவையான இடத்தல் சுயமாக பீல்டர்களை நிறுத்திக்கொள்ளவும் சுதந்திரம் தருகிறார். இதனால் தான் களத்தில் நன்கு செயல்பட முடிகிறது. இந்திய அணிக்கு வரும் ஆண்டுகளில் காத்திருக்கும் சவால்களை கோஹ்லியுடன் இணைந்து சிறப்பான முறையில் எதிர்கொள்ளவோம் எனவும் கூறியுள்ளார்.