ஆசிய கோப்பை 2018: வங்காளதேசம் வெற்றி பெற 256 ரன்கள் இலக்கு
இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றனர்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசியா கோப்பை தொடரின் 6வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் "பி" பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயத் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 10 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும், ஹஷ்மத்துல்லா சஹிடிடின் நிதான ஆட்டத்தாலும், ரஷீத் கானின் அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழந்து 255 ரன்கள் எடுத்தது. ஹஷ்மத்துல்லா சஹிடி(58), மற்றும் ரஷீத் கான் (57) அரைசதம் அடித்தனர்.
வங்காளதேசம் அணி தரப்பில் ஷகிப் அல் ஹசன் நான்கு விக்கெட்டும், அபு ஹேடர் ரோனி இரண்டு விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து 256 ரன்கள் எடுத்த வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் அணி ஆட உள்ளது.
ஏற்கனவே "பி" பிரிவில் இடம்பெற்றிருந்த இலங்கை அணி, இந்த இரு அணிகளுடன் விளையாடிய போட்டிகளில் தோல்வி அடைந்து ஆசியா தொடரில் இருந்து வெளியேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.