200வது போட்டிக்கு கேப்டனாக தலைமை தாங்கும் தோனி
இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பம்
இன்றைய போட்டியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி. இவரின் கேப்டனாக 200 வது போட்டியாகும். இவர் வரிசையில் ஒருநாள் சர்வதேச போட்டியில் கேப்டனாக ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 230; ஸ்டீபன் பிளெமிங் (நியூசிலாந்து) - 218 போட்டிகளிலும் பணியாற்றி உள்ளனர்.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு டாஸ் போடா வந்த முன்னால் கேப்டன் எம்.எஸ்.தோனி
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர் வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் ஆசிய கண்டத்தில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என மொத்தம் ஆறு அணிகள் மோதின. இந்த அணிகள் "ஏ" மற்றும் "பி" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் மோதின. இதில் ஹாங்காங் அணி வெளியேறியது. "பி" பிரிவில் இலங்கை, வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மோதின. இதில் இலங்கை அணி வெளியேறியது.
வெற்றி பெற்ற இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நான்கு அணிகள் "சூப்பர் 4 சுற்று"க்கு முன்னேறின. இதில் இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்) எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று மூன்றாவது போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளதால், மூத்த முக்கிய வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி (பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்) எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்று மூன்றாவது (கடைசி) போட்டி, ஒருவேலை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாது. ஏனென்றால் நாளை பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.