’இந்த முறை ஆட்டத்தில் பொறி பறக்கும்’ பாகிஸ்தானை எச்சரித்த ரோகித் சர்மா
கடந்தமுறை பாகிஸ்தானிடம் தோற்ற அணிபோல், இந்தமுறை இந்திய அணி இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 2021 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் கடைசியாக மோதியதில் இருந்து டி20 கிரிக்கெட்டில் அணியின் அணுகுமுறை மாறிவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததில்லை. ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் இரு அணிகள் மோதிய 12 போட்டிகளிலும் இந்தியா வென்றது. ஆனால், கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் தனது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான், இந்தியாவை 151 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசமும், முகமது ரிஸ்வானும் இணைந்து விக்கெட் இழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர். இந்த தோல்விக்குப் பிறகு இரு அணிகளும் சந்திக்கும் முதல் போட்டி இது. இந்தப் போட்டியில் அந்த தோல்விக்கான கணக்கை ஆசியக்கோப்பையில் தீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா உள்ளது. இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, "ஆசிய கோப்பை நீண்ட காலத்திற்குப் பிறகு நடக்கிறது. ஆனால் நாங்கள் கடந்த ஆண்டு துபாயில் பாகிஸ்தானுடன் விளையாடினோம். அந்த முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் ஆசிய கோப்பையில் களமிறங்கும் தற்போதைய இந்திய அணி வேறுவிதமானது. நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்த தோல்வியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், எதிரணிகளைப் பற்றி இந்தியா கவனம் செலுத்தாது எனக் கூறினார். அதிக தூரம் செல்வதையே ஒரு அணியாக நினைத்திருக்கிறோம் எனக் கூறிய அவர், ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என தெரிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்தியா சிறப்பாக விளையாடியதை நினைவு கூர்ந்த அவர், ஒரு அணியாக நாங்கள் சாதிக்க வேண்டிய மற்றும் அடைய வேண்டிய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறோம் எனக் கூறினார்.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
மேலும் படிக்க | AsiaCup2022: ரோகித் சர்மா விரும்பாத அந்த பிளேயர் இந்திய அணியில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ