பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தேசியக்கொடியை ஏந்தும் தங்கவேலு மாரியப்பன்
மாற்றுத்திறனாளிக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் பெருமையை தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் பெற்றுள்ளார்.
மாற்றுத்திறனாளிக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் பெருமையை தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் பெற்றுள்ளார்.
3_வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 43 நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனை கலந்துக் கொள்கின்றனர். மொத்தம் 2831 பேர் பங்கேற்க உள்ளனர். பாரா ஆசிய போட்டியில் 18 விதமான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா சார்பாக தடகள வீரர்-வீராங்கனை பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், 3_வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தேசிய கொடியை ஏந்தும் பெருமையை தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பல சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு இவரை கௌரவித்துள்ளது.