அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது!
 
அதாவது 2020 ஜனவரியில் நடைபெறும் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியினை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இந்திய சுற்றுப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் பல பெரிய மாற்றங்கள் இடம்பெற்றள்ளன. காரணம் இந்த தொடர் ஆனது உலக கோப்பையினை அடுத்து 6 மாத இடைவெளிக்கு பின்னர் ஆஸ்திரேலியா விளையாடும் முதல் ஒருநாள் தொடர் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் விளையாட்டு செய்திகளை படிக்க... 


ஆஸ்திரேலிய தனது கடைசி ஒருநாள் போட்டியினை உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த உலகக் கோப்பை அணியில் இருந்து தற்போது குறிப்பிடத்தக்க 7 மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது.


இந்த மாற்றத்தில் குறிப்பிடும் வகையில்., புகழ்பெற்ற வீரர்களான க்ளென் மேக்ஸ்வெல், நாதன் லியோன், ஒஸ்மான் குவாஜா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை என்பதாகும். அதே நேரத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டக்காரராக தென்படும் மார்னஸ் லாபூஷனுக்கு 14 பேர் கொண்ட அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜோஷ் ஹேசில்வுட் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.


ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் பாட் கம்மின்ஸ் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுளது. 5 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆடம் ஜம்பா மற்றும் ஆஷ்டன் அகர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணியுடன் இருக்க மாட்டார். இந்த ஒருநாள் தொடருக்கு, ஆஸ்திரேலிய அணி ஆண்ட்ரூ மெக்டொனால்டை தலைமை பயிற்சியாளராக அறிவித்துள்ளது.


மேலும் விளையாட்டு செய்திகளை படிக்க... 


ஆஸ்திரேலியா ஒருநாள் அணி: ஆரோன் பிஞ்ச், சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லாபுசாக்னே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா