தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும் இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி சனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கி சனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. 


ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிரான டி20 தொடரை சமநிலையிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய உற்சாகத்தில் உள்ளது. ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணி, தனது சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால், அதற்கு பலி தீர்க்க ஆயுத்தமாகி வருகிறது. எனவே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.