இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பென்னே கப்பா மைதானத்தில் நடைப்பெற்றது.



இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரராக களமிறங்கிய ஆர்கி சார்ட் 7(12) ரன்களில் வெளியேற, அரோன் பின்ச் 27(24) ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்த வெளியேற கெளன் மேக்ஸ்வெல் மட்டும் நிதானமாக விளையாடி 46(24) ரன்கள் குவித்தார். இதற்கிடையில் ஆட்டத்தின் 16.1-வது பந்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இரு அணிகளுக்கும் 17 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.


இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது. ஆஸி., அணி தரப்பில் கெளம் மேக்ஸ்வெல் 46(24), மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 33(19) ரன்கள் குவித்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை குவித்துள்ளார். இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.


ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி வீரர்கள் அதிரடியான ஆட்டதிதனை வெளிப்படுத்தினர். தொடக்க வீரராக களமிறங்கிய ரோகி ஷர்மா 7(8) ரன்களில் வெளியேற மறுமுனையில் இருந்த ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற விருவிருப்பான இறுதி கட்டத்தினை இந்தியா சந்தித்தது. 5 விக்கெட்டுகளை கையில் கொண்டு வெற்றி இலக்கை அடைய வேண்டிய நிலையில் இந்தியா இருந்தது.


கடைசி 6 பந்தில் 13 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா இருந்தது. எனினும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 


இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே குவிக்கமுடிந்தது.