INDvsAUS, 4வது நாள் ஆட்டம் நிறைவு: 5 விக்கெட் கையில் வெற்றிக்கு 175 ரன்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு 175 ரன்கள் தேவை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2_வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற 175 ரன்கள் தேவை. தற்போது ஐந்து விக்கெட்டுக்கள் இழந்துள்ள இந்திய அணியிடம், இன்னும் ஐந்து விக்கெட்டும், ஒருநாள் முழுவதும் இருக்கிறது. இந்திய அணி நிதானமாக ஆடினால் வெற்றி நிச்சியம்.
அதேபோல களத்தில் இருக்கும் ரிஷாப் பந்த்* 9(19) மற்றும் ஹனுமா விகார்* 24(58) ஆகியோருக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. இவர்கள் தங்கள் திறமையை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், இந்திய அணி பெர்த் டெஸ்டில் வரலாறு படைக்கும்.
தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது.
அஜிங்கியா ரஹானே 30(47) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனர். தற்போது இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
முரளி விஜய் 20(67) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனர். தற்போது இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கேப்டன் விராட் கோலி 17(40) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனர். தற்போது இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய்* 20(62) அஜிங்கியா ரஹானே *1(2) ஆடி வருகின்றனர்.
தற்போது இந்திய அணி 17 ஓவருக்கு இரண்டு விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. முரளி விஜய்* 20(55) மற்றும் கேப்டன் விராட் கோலி* 20(55) ஆடி வருகின்றனர். வெற்றி பெற 241 ரன்கள் தேவை.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரோலியாவின் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் தனது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமகா கேப்டன் விராட் கோலி 123(257) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் ரன்களை விட 43 ரன்கள் குறைவாக இந்திய அணி எடுத்தது.
43 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 48 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.
175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸி., அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்து விளையாடியது. இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலியா 243 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 287 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் 0(4) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4(11) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி, இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
தற்போது இந்திய அணி 13 ஓவருக்கு இரண்டு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. முரளி விஜய்* 16(39) மற்றும் கேப்டன் விராட் கோலி* 14(24) ஆடி வருகின்றனர்.