ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்த நிலையில், தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றதுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுள்ளது. 


இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நாளை துவங்க உள்ளது. நாளை நடைபெற உள்ள 4வது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் சிட்னி மைதானம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.


இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளதால், இரு அணிகளும் கடுமையான பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியை பொருத்த வரை எப்படியாவது, நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். அதற்க்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். 


இந்திய அணியை பொருத்தவரை கடந்த காலத்தில் செய்ய முடியாததை, தற்போது செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. 70 ஆண்டுகால வரலாற்றை மாற்றுமா? விராட் தலைமையிலான இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ, டெஸ்ட் தொடரை வென்றுவிடும். இதன்மூலம் இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சாதனை படைக்கும்.


அதேபோல சிட்னி கிரிக்கெட் மைதானத்தை பொருத்த வரை, ஆஸ்திரேலிய அணி 19 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. இந்திய அணி பொருத்த வரை கடந்த 1977-78 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் (நான்காவது டெஸ்ட்) இன்னிங்ஸ் மற்றும் இரண்டு ரன்களில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் இந்திய அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி பெறவில்லை. இதையும் மாற்ற இந்திய அணி தயாராகி வருகிறது.