ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
மேற்கிந்தியாவில் நடைப்பெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி-1 போட்டியில் மேற்கிந்திய அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மேற்கிந்தியாவில் நடைப்பெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதி-1 போட்டியில் மேற்கிந்திய அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
6_வது மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியா கயானாவில் நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.
அதன்படி இன்று இத்தொடரின் இரு அரைஇறுதி போட்டிகளும் நடைப்பெறுகிறது. முதல் அரையிறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதின. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.
முதல் அரையிறுதி போட்டி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்., அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது. ஆஸி., அணி தரப்பில் அலைசா ஹேலி 46(38), மெக் லேர்னிங் 31(39) ரன்கள் குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாறிய மேற்கிந்திய அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. இதன்காரணமாக ஆட்டத்தின் 10-வது ஓவர் முடிவில் மேற்கிந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்கள் மட்டுமே குவித்தது. மேற்கிந்திய அணி தரப்பில் ஸ்டெய்ப்பன் டெய்லர் மட்டுமே 16(28) என்னும் இரட்டை இலக்க ரன் குவித்தார். இதர வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். இதனையடுத்து ஆஸி., அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள ஆஸி., இந்தியாவும், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் இறுதி போட்டியினை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.