ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நாடல் ஆகிய இருவரும் மோதினர்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் ரபேல் நாடலைத் தோற்கடித்து, ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.


பரபரப்பாக ஐந்து செட்டுகள் வரை நடந்த இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி பெடரர் வெற்றி பெற்றார். இதன் மூலம் பெடரர், 5வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார். பெடரர் பெறும் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.