ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. சானியா மிர்சாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால், இந்த இணை வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா இணை கலப்பு இரட்டையர் அரையிறுதிப் போட்டியில்  இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி, அமெரிக்காவின் டிசைரி க்ராவ்சிக் ஜோடியை எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடிய சானியா - போபண்ணா இருவரும் 7-6(7/1), 6-7(5/7), 10-6 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றது. டைபிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை இந்திய ஜோடி வென்றது, ஆனால் இரண்டாவது செட்டில் இங்கிலாந்து-அமெரிக்க ஜோடி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் போபண்ணா - சானியா இணை, நீல் ஸ்குப்ஸ்கி, அமெரிக்காவின் டிசைரி க்ராவ்சிக் ஜோடியை தோற்கடித்தது.     


மேலும் படிக்க | 2022இன் சிறந்த டி20 வீரர்... விருதை தட்டிச்சென்ற சூர்யகுமார் யாதவ்



இந்திய ஜோடியான சானியா மிர்சா மற்றும் மகேஷ் பூபதி ஜோடி 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட்டத்தை வெல்ல சானியாவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த முறை அவரது ஜோடி மகேஷ் பூபதி அல்ல, ரோகன் போபண்ணா. சானியா-போபண்ணா ஜோடி 6 ஆண்டுகளுக்கு முன்பு 2017-ல் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது. இந்த ஜோடி தற்போது மீண்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 


ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் பெலாரஸின் அரினா சப்லெங்கா ஆகியோர் எதிர்பார்த்தபடியே அரையிறுதிக்கு முன்னேறினர். நான்காம் நிலை வீரரான ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஐந்தாம் நிலை வீரரான ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ்வை தோற்கடித்தார். சபலெங்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டோனா வெசிச்சை தோற்கடித்தார்.


மேலும் படிக்க | IPL அணிகள் ஏலத்தை மிஞ்சிய WPL... மகளிர் அணிகளின் ஏலத்தொகை முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ