உலக கோப்பை டி20 போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.  குரூப் Bயில் சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.  மற்ற அணிகளை ஒப்பிடும் போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் சிறப்பாகவே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார்.  நேற்றைய போட்டியில் 45 பந்துகளில் 51 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 வரலாற்றில் விரைவாக 1000 ரன்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார் பாபர் அசாம்.  26 இன்னிங்ஸ்சில் இந்த சாதனையை படைத்த இவர், விராட் கோலி 30 இன்னிங்ஸ்சில் அடித்திருந்தார்.  இதன் மூலம் கோலியின் சாதனையை முறி அடித்தார் அசாம்.  



தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸ் 31, ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 32, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 36 இன்னிங்ஸ்சில் 1000 ரன்களை அடித்துள்ளனர்.  நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான வெற்றி பெற்றது.  ஆப்கான் கையில் இருந்த போட்டியை ஆசிப் அலி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தன் பக்கம் கொண்டு வந்தார்.  19வது ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் ஆசிப்.


Points Table



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR