Ashes 2023: சின்னப்பிள்ளைத்தனமாக விக்கெட்டை விட்ட பேர்ஸ்டோவ் - அந்த ரன் அவுட் சரியா... சர்ச்சையா?
Bairstow Run Out: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின் ஐந்தாம் நாளான இன்று, ஜானி பேர்ஸ்டோவ்வின் ரன்-அவுட் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதுகுறித்த விவரங்களை இதில் காணலாம்.
Ashes 2023, Bairstow Run Out: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மிகவும் பரபரப்பாக நடைபெற்று ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி இன்றோடு நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று, 254 ரன்களை எடுத்தால் வெற்றி என இங்கிலாந்தும், அதற்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என ஆஸ்திரேலியாவும் களம் கண்டன.
டக்கெட் 50 ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். நாளின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவிக்கும் முனைப்பில் இருந்த இந்த இங்கிலாந்து ஜோடி ஆஸ்திரேலியாவை சோதனைக்கு உள்ளாக்கியது. ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை தொடர்ந்து வந்தார். அந்த சூழலில், டக்கெட் 83 ரன்களை எடுத்திருந்தபோது ஹெசில்வுட்டின் ஷார்ட்-பால் பொறியில் சிக்கி ஆட்டமிழந்தார். அதன்பின், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினார்.
கேரி வீசிய த்ரோ
டக்கெட் அவுட்டான பின் ஸ்டோக்ஸ் மேலும் நிதானம் காட்ட, பேர்ஸ்டோவ்வும் அவருக்கு துணை நின்றார். அப்போது, கேம்ரூன் கிரீன் வீசிய 52ஆவது ஓவரின் கடைசி பந்தில் தான் அந்த சர்ச்சைக்குரிய (?) ரன்-அவுட் நிகழ்ந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தை பேர்ஸ்டோவ் குணிந்து கீப்பருக்கு விட்டுவிட்ட நிலையில், கடைசி பந்து என்பதால் கிரீஸை விட்டு வெளியே நடக்க தொடங்கினார். ஆனால், அவர் கிரீஸை விட்டு நடக்க தொடங்கும் முன்பே ஆஸ்திரேலிய கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை ஸ்டம்பை நோக்கி த்ரோ செய்துவிட்டார். பந்து சரியாக ஸ்டம்பை தாக்க ஆஸ்திரேலியா வீரர்கள் ரன்-அவுட்டுக்கு நடுவர்களிடம் அப்பீல் செய்தனர்.
பேர்ஸ்டோவ் ரன்-அவுட்
பேர்ஸ்டோவ் அங்கு என்ன நடக்கிறது என்பதை உணர சற்று நேரம் எடுத்தது. கள நடுவர்கள், அந்த ரன்-அவுட் முடிவை மூன்றாம் நடுவருக்கு பரிந்துரைத்தார். அதன்பின், மூன்றாம் நடுவர் அந்த ரன்-அவுட்டை ஆய்வு செய்ததில், அவர் கிரீஸை விட்டு வெளியேறுவதற்கு முன்னரே கேரி த்ரோ செய்துவிட்டது உறுதியாகிவிட்டது. பேர்ஸ்டோவ் ரன் எடுக்கும் நோக்கத்துடன் வெளியேறவில்லை என்றாலும், பந்து Dead ஆவதற்கு முன் கிரீஸை விட்டு வெளியேறியதால் ரன்-அவுட் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
சர்ச்சையா... சரியா...?
இது மிகவும் அரிதான ஒன்றாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு இந்த ரன்-அவுட்டால் பெரிய பலன் கிடைத்த நிலையில், பேர்ஸ்டோவ் பலத்த அதிருப்தியுடன் பெவிலியனை நோக்கி திரும்பினார். பேர்ஸ்டோவ் ரன்-அவுட் சர்ச்சையாக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியாவின் அப்பீலில் எந்த தவறும் இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் கேலி செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 178 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பின், ஸ்டூவர்ட் பிராட் களமிறங்கினார். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.
மிரட்டும் ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ் விக்கெட் இருக்கும் வரை இங்கிலாந்திற்கு நம்பிக்கையும், ஆஸ்திரேலியாவுக்கு அச்சமும் இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக, கிரீன் வீசிய 56ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள், 1 பவுண்டரி என அடித்த ஸ்டோக்ஸ் தனது சதத்தையும் பூர்த்தி செய்தார். இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்கு முன் வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற்ற 128 ரன்கள் தேவையாக உள்ளது. இரண்டு செஷன்கள் முழுவதுமாக கையில் உள்ளது.
மேலும் படிக்க | ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் வெளியேற்றம்: ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ