டாஸ்ஸில் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. நன்றாக விளையாடிய கொல்கத்தா 5 விக்கெட்டுகள் கொடுத்து 183 ரன்கள் எடுத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்து ஆடிய பெங்களூரு அணி நிதானமாக விளையாடியது. கெயில் 7 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு புயல் வேகம் எடுத்த கெயில் மற்றும் விராட் கோலி அடித்து ஆடினர். ஒரு கட்டத்தில் நன்றாக ஆடிய கெயில் சுனில் நரைன் பந்தில் எல்.பி.டபிள்யு ஆனார்.


அதன்பிறகு விராட் கோலியுடன் சேர்ந்த டிவில்லியர்ஸ் இருவரும் மாறி மாறி அடித்து ஆடி தங்கள் அரைசதத்தை பூர்த்திசெய்தனர். இறுதியில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். பெங்களூரு தற்போது 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.