ICC ஊழல் தடுப்பு விதிமுறையின் மூன்று வகையான குற்றச்சாட்டின் கீழ் வங்கதேச டெஸ்ட் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது ICC!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்காளதேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைப்பெற்றபோது சூதாட்டக்காரர்கள் ஷாகிப் அல் ஹசனை நாடியதாக எழுந்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் IPL தொடரில் விளையாடும்போதும் சூதாட்டக்காரர்கள் ஷாகிப் அல் ஹசனை நாடியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து ICC-யின் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, இடைத்தரகர்கள் தன்னை அனுகியது தொடர்பாக ஷாகிப் அல் ஹாசன் ICC-க்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ICC-ன் ஊழல் தடுப்பு நெறிமுறைகளை ஷாகிப் அல் ஹாசன் தவறியதாக அவருக்கு இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது ICC. 


மேலும், ஷாகிப் அல் ஹசன் தடைக்காலத்தின் ஒரு பகுதியான சஸ்பெண்ட் கண்டிசனை ஒப்புக்கொண்டால், மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு அக்டோபர் 29-ந்தேதியில் இருந்து ஷாகிப் அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தடைகுறித்து ஷாகிப் அல் ஹசன் விடுத்துள்ள அறிக்கையில் ‘‘மிகவும் விரும்பும் விளையாட்டில் எனக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கி்றது. ஆனால், என்னை அணுகியது குறித்து தகவல் தெரிவிக்காததற்கு இந்த தடை என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.