உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்., நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் குவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடனான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அணியில் அதிகப்பட்சமாக ஷகிப் உல் ஹாசன் 64(68) ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் 30 ரன்கள் எட்டுவதற்குள்ளாக பெவிளியன் திரும்பினர். இதன் காரணமாக ஆட்டத்தின் 49.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த வங்கதேசம் 244 ரன்கள் குவித்தது.



நியூசிலாந்தின் மாட் ஹென்றி 4 விக்கெட் குவித்தார். ட்ரண்ட் போல்ட் 2 விக்கெட், பர்கிவுசன், கிராண்ட் ஹோம், சாட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 


இதனையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கவுள்ளது!