லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 43-வது லீக் ஆட்டம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது உள்ளது. இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

 

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 350 ரன்களை குவித்து, பின்னர் அந்த அணியை 311 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் 400 ரன்களை குவித்து, 316 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.

 

இந்த்ச சவாலான நிலையில், பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான பக்கர் சமான் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். 13 ரன்களில் பக்கர் சமான் கேட்ச் அவுட் ஆனார். அதன் பின் வந்த பாபர் ஆசம் இமாம் உடன் கைகோர்த்தார். இந்த இணை சிறாப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. வங்கதேச பந்துவீச்சை பறக்கவிட்ட இருவரும் 157 ரன்களை சேர்த்தனர். நன்றாக ஆடிய பாபர் ஆசாம் 96(98) ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனதால், சதத்தை தவறவிட்டார். இமாம்-உல்-ஹக் 100 பந்தில் 100 ரன்களை அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது, வங்களாதேஷ் அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 5 விக்கெட்டை கைப்பற்றினார்.

 

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட வங்களாதேஷ் அணியின் வீரர்கள் யாரும் சரியாக நிலைத்தது நின்று ஆடவில்லை. ஷாகிப் அல் ஹசன் மட்டும் 64 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக 44.1 ஓவரில் 221 ரன்னுக்கு வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டை கைப்பற்றினார்.

 

ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசத்தை 7 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்திருந்தால், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அமைத்திருக்கும். ஆனால் அப்படி நடைபெற வாய்ப்பு இல்லாததால், வெற்றியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்.