மேற்கிந்தியா-வுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம்!
மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேச கிரிக்கெட் அணி!
மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேச கிரிக்கெட் அணி!
மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய அணி வென்றது.
இதனையடுத்து நடைப்பெற்று வந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்றது. பரபரப்பாக சென்ற இப்போட்டியில் வங்கதேசம் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் குவித்தது. வங்கதேசம் அணி தரப்பில் தமீம் இக்பால் 103(124) ரன்கள் குவித்தார். இதனையடுத்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க கெயில் 73(66), ஹாய் ஹோப் 64(94), போவல் 74(41) ரன்கள் குவித்தனர். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனையடுத்து வங்கதேசம் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை வென்றது. இந்த தொடர் வெற்றி மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு வங்க தேச அணி ஆசிய கண்டத்துக்கு வெளியே தனது முதல் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.