ICC உலக கோப்பை U-19 ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக பர்ஹான் ஜாகில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020 ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு பர்ஹான் ஜாகில் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அணியைப் பிரதிபலிக்கும் வகையில், தேசிய தேர்வுக் குழு இதுகுறித்து தெரிவிக்கையில்., தேர்ந்தெடுக்கப்பட்ட அணி ஒரு வலிமையான அணி என்றும், போட்டியில் வழங்குவதற்கான தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது போட்டியின் குழு D-ல் உள்ளது. எனவே எதிர்வரும் ஜனவரி 17-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும், ஜனவரி 22-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 2020 ஜனவரி 24-ஆம் தேதி கனடாவையும் தனது குழு போட்டியில் ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.


இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் சமியுல்லா சலார்சாய், மஜீத் ஆலம், ஆரிப் கான், இஸ்லாம் சசாய் மற்றும் இஹ்சன் மண்டோசாய் ஆகியோர் அணியில் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வீரர்களின் உதவியால் ஆப்கானிஸ்தான் அணி குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


---ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி விவரம் பின்வருமாறு---


பர்ஹான் ஜாகில் (C), செடிக் அடல், ரஹ்மானுல்லா சத்ரான், இப்ராஹிம் சத்ரான், இஷாக் முகமது, நூர் அஹ்மத், ஷபிகுல்லா கஃபாரி, ஜம்ஷித் மிர் அலிகில், அப்துல் ரஹ்மான், அபிட் தனிவால், பசல் ஹக், இம்ரான் மிர், சோஹைப் ஜமன்கில், ஆசிப் முசாசாய் மற்றும் ஆபிட் முகமதி.