எதிர்வரும் 19 வயதுக்குட்பட்ட சேலஞ்சர் டிராபி 2019-க்கான 15 பேர் கொண்ட இந்தியா A, இந்தியா B மற்றும் இந்தியா C அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

19 வயதுக்குட்பட்ட சேலஞ்சர் டிராபி 2019 வரும் நவம்பர் 11 முதல் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று அணிகளை தவிர, நேபாளம் ‘A’ அணி போட்டியின் நான்காவது அணியாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


"நவம்பர் 11 முதல் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் Paytm U19 சேலஞ்சர் டிராபி 2019-க்கு இந்தியா A, இந்தியா B மற்றும் இந்தியா C அணிகளை அகில இந்திய ஜூனியர் தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் நேபாளம் 'A' நான்காவது அணியாக இடம்பெறும், " என BCCI வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் சந்த் ஜூரெல் இந்தியா A அணியை வழிநடத்துவார், அதே சமயம் அவரது மாநில வீரர் பிரியாம் கார்க் இந்தியா B அணியின் கேப்டனாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து மூன்றாவது அணி, அதாவது இந்தியா 'C' அணி கர்நாடகாவைச் சேர்ந்த சுபாங் ஹெக்டே தலைமையில் வழிநடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், வளர்ந்து வரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முறையே காயமடைந்த அர்ஷ்தீப் சிங் மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோருக்கு மாற்றாக சிவம் மாவி மற்றும் ஆதித்யா தகரே ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். அதேவேளையில் நாகர்கோட்டி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவராலால் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்றும் BCCI மருத்துவ குழு தகவல் அளித்துள்ளது. 


19 வயதுக்குட்பட்ட சேலஞ்சர் டிராபி 2019-க்கான மூன்று அணிகள் பின்வருமாறு:


India A: யஷஸ்வி ஜெய்ஸ்வால் (MCA), சாய் சுதர்ஷன் (TNCA), ஜெய் கோஹில் (சவுராஷ்டிரா CA), சமீர் ரிஸ்வி (UPCA), அர்ஜுன் மூர்த்தி (TNCA), துருவ் சந்த் ஜூரெல் - கேப்டன் & விக்கெட் கீப்பர் (UPCA), நிதீஷ் குமார் ரெட்டி (Andhra CA), கிருதக்ய குமார் சிங் (UPCA), அமன் படோரியா (MPCA), ரிஷாப் பன்சால் (UPCA), பூர்ணாங்க் தியாகி (UPCA), பிரின்ஸ் யாதவ் (DDCA), தர்ஷத் குமார் (Assam CA), அங்கித் ரெட்டி (Hyderabad CA), டெபோபிரதிம் ஹல்தார் (CAB)


Coach – பராஸ் மாம்ப்ரே


India B: திலக் வர்மா (Hyderabad CA), சாகர் தைய்யா (Haryana CA), யாஷ் துள் (DDCA), பிரியம் கார்க் - கேப்டன் (UPCA), சித்தீஷ் வீர் (Maharashtra CA), கிருத்தி கிருஷ்ணா விக்கெட் கீப்பர் (KSCA), திஷ்யாங் ஜோஷி (CA Mizoram), Atharva Ankolekar (MCA), ரவி பின்சால் (RCA), நிர்மல் குமார் (TNCA), ஆகாஷ் சிங் (RCA), அகுயிப் கான் (UPCA), விவேக் குமார் (Haryana CA), நேஹல் பான்ச் (Haryana CA), ஹர்ஸ் ஜன்வால் (HPCA)


Coach – அபய் ஷர்மா


India C: தியான்ஷ் சக்சேனா (MCA), அர்ஜூன் ஆசாத் (UTCA Chandigarh), பிரதோஷ் ராஜன் பவுள் (TNCA), சாஷ்வத் ராவட் (Baroda CA), வருண் லாவண்ட் (MCA), குமார் குஷ்ராக் விக்கெட் கீப்பர் (JSCA), சௌர்வ தாகர் (DDCA), சுபாங்க் ஹெட்ஜ் கேப்டன் (KSCA), ரவி ரோஷன் (DDCA), விக்ராந்த் பந்தாரியா (MPCA), CTL ரக்ஷன் (Hyderabad CA), தந்தி ராவட் (MCA), வித்தியாந்தர் பாட்டில் (KSCA), ஆர்யா செய்தி (CA Uttarakhand), யூசப் முஜ்தாப் (JKCA)


Coach - ஹரிகிருஷ்ணா கானிட்கர்.