தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் ராகுல் டிராவிட்
முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக பி.சி.சி.ஐ. நியமித்துள்ளது.
பெங்களூரு: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000-க்கு அதிகமான ரன்களை அடித்த உலகின் சில வீரர்களில் ஒருவரான முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக பி.சி.சி.ஐ. நியமித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுத்தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் பார்வையிடுவார். அகாடமியில் பயிற்சிக்காக வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்களை வழி நடத்துவார். அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், அவர்களை ஊக்குவிப்பதில் ஈடுபடுவார். என்று கூறியுள்ளது. மூத்த ஆண்கள் மற்றும் பெண்கள் தலைமை பயிற்சியாளர்களுக்கு தேவையான நுணுக்கங்களை வழங்குவவார் என்று கூறப்பட்டு உள்ளது.